ஸ்ரீபெரும்புதூரில் ‘ஐபோன் 13’ தயாரிப்பு: விலை குறைய வாய்ப்பு?

ஸ்ரீபெரும்புதூரில் ‘ஐபோன் 13’ தயாரிப்பு: விலை குறைய வாய்ப்பு?

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் செல்போன் தயாரிக்கும் ஆலையில் ஐபோன் 13 மாடல் போன்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் செல்போன், லேப்டாப் என பல சாதனங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் செல்போன் தயாரிக்கும் ஆலையில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை ஆப்பிள் தொடங்கியுள்ளது. இதனை ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனங்கள் ஆப்பிள் ஐபோன்களின் பழைய மாடல் போன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்திய மக்களுக்காக இந்தியாவிலேயே இந்த போன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளுக்கு இப்போதைக்கு இது ஏற்றுமதி செய்யப்படாது எனவும் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in