`கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்'

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து
`கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்'

பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோயில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும் என அதிரடியாக கருத்து தெரிவித்தது.

நாமக்கல்லில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோயில் கட்டுமானம் உள்ளதாக பாப்பாயி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில், கோயில் கட்டுமானம் தங்கள் இடத்திற்கு செல்லும் வழியை தடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த 2 மாதங்களில் கோயில் நிர்வாகம் கட்டுமானங்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதோடு, பொது இடத்தை ஆக்கிரமிக்கச் சொல்லி எந்தக் கடவுளும் கேட்பதில்லை. கடவுளின் பெயரில் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில்கட்டி நீதிமன்றத்தின் கண்களை மூடிவிட முடியாது. பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in