உக்ரைன் ராணுவத்தில் இருந்து கோவை திரும்ப மாணவர் முடிவு

உக்ரைன் ராணுவத்தில் இருந்து
கோவை திரும்ப மாணவர்  முடிவு

கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களது மூத்த மகன் சாய்நிகேஷ். இவர் இந்திய ராணுவத்தில் சேர எடுத்த முயற்சி உயரம் காரணமாக தோல்வியடைந்தது. இதனால் உக்ரைனில் விமானவியல் படித்து வந்தார்.

கடந்த மாதம் 24-ம் தேதி உக்ரைன்- ரஷ்யா இடையே போர் துவங்கியவுடன் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பத் துவங்கினர். ஆனால், சாய்நிகேஷ் வரவில்லை. அவரது பெற்றோர் தொடர்பு கொண்டபோது, தாயகம் திரும்ப மறுத்ததாக கூறப்பட்டது. அத்துடன் உக்ரைன் துணை ராணுவத்தில் தான் பணியாற்றுவதாக சாய்நிகேஷ் கூறியுள்ளார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

சாய்நிகேஷ்
சாய்நிகேஷ்

இதனால் தங்களது மகனை மீட்டுத்தரவேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறைக்கு, சாய்நிகேஷ் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக சாய்நிகேஷ் பெற்றோரிடம் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். சாய்நிகேஷ் இந்தியா வரவேண்டும் என்று தொடர்ந்து அவரது பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக அவரது பெற்றோர் கூறுகையில், ``சாய்நிகேஷை தொடர்புகொண்டு பேசினோம். அங்கு இருக்கக்கூடிய சூழல் குறித்தும் எடுத்து கூறி, நாடு திரும்புமாறு கேட்டு கொண்டோம். அவரும் எங்கள் விருப்பத்தை ஏற்று இந்தியாவிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாங்கள் இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு எங்கள் மகன் நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதை தெரிவித்தோம். அவர்களும் எங்களைப் பொறுமையுடன் இருக்குமாறும், உங்கள் மகனை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்'' என்று கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in