
டிராக்டர்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் மதுரையில் தடம் புரண்டது. இதன் காரணமாக மதுரை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன.
மதுரை வாடிப்பட்டியில் உள்ள டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்திற்கு டிராக்டர்களை ஏற்றிய ரயில் இன்று காலை வந்து கொண்டிருந்தது. மதுரை கூடல்நகரில் ரயிலின் கடைசி சரக்குப் பெட்டியின் ஒரு சக்கரம் மட்டும் திடீரென தடம் புரண்டு செல்லூர் அருகே ரயில் பாதையைவிட்டு இறங்கியது. இதனை சரி செய்பும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக மதுரை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. குருவாயூர் - சென்னை ரயில் மதுரை பாலம் பகுதியில் நிறுத்தப்பட்டது.