ரூ.30,000 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்: கொந்தளித்த வியாபாரிகள் பூக்களை சாலையில் கொட்டி போராட்டம்

பூக்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்
பூக்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

உசிலம்பட்டியில் அதிகாரிகளைக் கண்டித்து பூ வியாபாரிகள் பூக்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சந்தைத் திடல் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளை அளவீடு செய்து மறு டெண்டர் (வாடகைக்கு) விட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், பூ மார்க்கெட் பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, சாக்கடை வசதி செய்து கொடுக்க கடை ஒன்றிற்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் லஞ்சம் கேட்பதாகவும் இதனைக் கண்டித்தும், கடை மறுவாடகைக்கு விடுவதைக் கண்டித்தும் பூ வியாபாரிகள் பூக்களை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் நேரில் சென்று பூ வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in