ஓடோடிச் சென்ற பெண் காவலர்... எழும்பூர் ரயில் நிலையத்தில் இரவில் திக் திக் சம்பவம்

ஓடோடிச் சென்ற பெண் காவலர்... எழும்பூர் ரயில் நிலையத்தில் இரவில் திக் திக் சம்பவம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் பயணி ஒருவர் தவறி விழுந்தார். இதைப் பார்த்த ரயில்வே பெண் காவலர் ஓடிச் சென்று பயணியை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அடித்துப்பிடித்து ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த நடைமேடையில் ரயில்வே பெண் காவலர் மாதுரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ரயிலும் புறப்பட்டது. அப்போது, ரயிலில் இருந்து பயணி ஒருவர் திடீரென கீழே விழுந்தார்.

இதை பார்த்த பெண் காவலர் மாதுரி ஓடோடிச் சென்று அந்த பயணியின் கையை பிடித்து நடைமேடைக்கு கொண்டு வந்தார். அப்போது, பெண் காவலர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனாலும், உடனடியாக எழுந்து அந்த பயணியின் உயிரைக் காப்பாற்றி விட்டார். இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பயணியின் உயிரை காப்பாற்றிய காவலர் மாதுரிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in