சென்னை கடலில் விநாயகர் சிலையைக் கரைத்தபோது ஒருவர் மூழ்கி உயிரிழப்பு

8 வயது மகனை காப்பாற்றிய தந்தை கடலில் மூழ்கிய துயரம்
சுரேஷ்
சுரேஷ்
Updated on
1 min read

சென்னை, கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிளம்பர் சுரேஷ் (38). இவருக்கு திருமணமாகி மனைவி சத்யா (35) , ஷியாம் (8) , பிரிதிக்‌ஷா(6) என 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று, சுரேஷ் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வீட்டில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடியுள்ளார். பின்னர், வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையைத் தனது மகன் ஷியாமுடன் பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கக் கொண்டு சென்றார்.

மகனுடன் சிலையைக் கடலில் கரைக்கும்பொழுது, ஷியாம் கடல் அலையில் சிக்கி இழுத்துச் சென்றதைப் பாரத்த தந்தை சுரேஷ் உடனே கடலில் குதித்து தனது மகனைக் காப்பாற்றி கரைக்கு வரும்பொழுது, எதிர்பாரத விதமாக அலையில் சிக்கி சுரேஷ் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் மகன் ஷியாம் உயிர் தப்பினார்.

அங்கிருந்த மீனவர்கள் சுரேஷை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

பின்னர், தகவல் அறிந்த நீலாங்கரை போலீஸார் சுரேஷின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலில் மூழ்கிய மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in