பனங்காய் வியாபாரிகளை பலிகொண்ட பேருந்து!

பனங்காய் வியாபாரிகளை பலிகொண்ட பேருந்து!

அரியலூர் அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நுங்கு வியாபாரிகளான தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). அவரும் அவரது தந்தை தியாகராஜனும் (65) பனை மரங்களிலிருந்து பனங்காய் வெட்டி அதில் இருந்து நுங்கு எடுத்து விற்றுவந்தனர். இன்று அதிகாலை வழக்கம்போல் பனங்காய் வெட்டி எடுத்துக் கொண்டுவந்து கீழப்பழுவூர் உழவன் எடை மேடை அருகே வைத்துவிட்டு, மீண்டும் பனங்காய் வெட்டுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது தஞ்சாவூரில் இருந்து அரியலூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து இவர்களின் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கீழப்பழுர் போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதிகாலையில் நடந்த இந்தக் கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.