கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள்… மதுரை ஆதீனம் திடீர் கோரிக்கை!

கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள்… மதுரை ஆதீனம் திடீர் கோரிக்கை!

கோயில் உண்டியல்களில் காசு போடாதீர்கள் என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நேற்று இரவு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் பேசுகையில், " கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என நினைக்கிறார்கள். நாங்கள் ஏன் அரசியல் பேச கூடாது? அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது?
தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரமே திருக்கோயிலுக்குள்தான் உள்ளது. முதலில் அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை? அரசியல்வாதிகள் கோயிலில் தர்க்காராக வந்து இருந்து கொள்கிறார்கள். கோயில் நகைகளை உருக்குவதாககூட கூறுகிறார்கள். ஆனால் எங்கு உருக்குகிறார்கள் என தெரியவே இல்லை. தற்போது சாமி வருவது போல் உண்டியல் வருகிறது. இதில் மக்கள், இந்து அறநிலையத்துறை கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். ஏனெனில் அவை கோயிலுக்குச் செல்வதில்லை. உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது" என்றார்.

மேலும், " இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தைப் பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி எனச் சொல்கிறார்கள் ” என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in