`இதை செய்யாதீர்கள்; லாக்கப் மரணம் ஏற்படாது'- காவலர்களுக்கு டிஜிபி அறிவுரை

`இதை செய்யாதீர்கள்; லாக்கப் மரணம் ஏற்படாது'- காவலர்களுக்கு டிஜிபி அறிவுரை

தமிழகத்தில் லாக்கப் மரணங்களை தடுக்க காவலர்களுக்கு சிறப்பு தற்காப்பு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையகரத்திற்க்கு உட்பட்ட 25 காவல் நிலைய பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி கலந்து கொண்டார்.

பின்னர் மீட்கப்பட்ட 1.72 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகை, செல்போன் மற்றும் 75 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை டிஜிபி உரியவர்களிடம் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை தனிப்படை போலீஸார் உள்ளிட்டோருக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, ஆவடி காவல் ஆணையரகத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் கலவரத்தை எளிதாக கட்டுப்படுத்தும் வகையில் கையாளும் தற்காப்பு ஆயுதங்கள் ரப்பர் குண்டு துப்பாக்கி, ரப்பர் பந்து லாஞ்சர், ஷாக்‌ஷீல்டஸ், ஷாக்பேட்டன், மெட்டல் கைவிலங்கு, தடுப்பான், போன்றவை அறிமுகம் செய்யப்பட்டு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு அதிகரிக்கும். மேலும் குடிபோதையில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி, தகராறில் ஈடுபடுவதால் பதிலுக்கு காவலர்கள் திரும்ப லத்தியால் தாக்குவதால்தான் லாக்கப் மரணங்கள் ஏற்படுகிறது. இதன் மூலம் அதனை தவிர்க்க முடியும்.

கஞ்சா தடுப்பு வேட்டை 1.0 மற்றும் 2.0-வில் இதுவரை தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் கஞ்சா தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

பெரியளவில் கஞ்சா தொழில் செய்பவர்களில் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. கள்ள சாராயம் விற்பனை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருசில மலை கிராமங்கள் தவிர தமிழகத்தில் வேறு எங்கும் கள்ளசாராயம் விற்பனை இல்லை. அங்கும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in