விலையில்லா சமோசா, டீ வழங்கும் டீக் கடைக்காரர்: ஸ்டாலின் பிறந்தநாளில் அசத்தல்

விலையில்லா டீ வழங்கும் கமலக்கண்ணன்
விலையில்லா டீ வழங்கும் கமலக்கண்ணன்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தொண்டர் ஒருவர் தனது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சமோசாவுடன் டீயும் அவற்றுடன் மாஸ்க் ஒன்றும் இலவசமாக இன்றைய தினம் முழுக்க வழங்கி வருகிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கல், இனிப்புகள் வழங்குதல், கேக் வெட்டுதல் என்று திமுகவினர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் வித்தியாசமாக முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் கமலக்கண்ணன்.

கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே டீ கடை வைத்திருக்கிறார் கமலக்கண்ணன் என்ற திமுக தொண்டர். மாற்றுத்திறனாளியான இவர் இன்றைய தினம் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக டீயுடன் சமோசாவும் தந்து ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடுகிறார். அத்துடன் அனைவருக்கும் மாஸ்க் ஒன்றையும் இலவசமாக வழங்குகிறார்.

இதற்காக இவர் நேற்றே அறிவிப்பு பலகை வைத்து தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார். இன்று எவ்வளவு பேர் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் இல்லை என்று சொல்லாமல் தொடர்ந்து வழங்கி வருகிறார். இன்று இவற்றை இலவசமாக வழங்குவதால் பால் உள்ளிட்ட பிற பொருட்கள் விற்பனை இல்லை என்று அவற்றை நிறுத்தி வைத்துவிட்டு இலவசத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் கமலக்கண்ணன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in