`நிறைய பணம் கொடுத்திருக்கேன்'- இன்ஸ்பெக்டரை சிக்கவைத்த சாராய வியாபாரி

`நிறைய பணம் கொடுத்திருக்கேன்'- இன்ஸ்பெக்டரை சிக்கவைத்த சாராய வியாபாரி

சீர்காழி பகுதியில் கள்ள மது விற்பனைக்கு துணை போனது தொடர்பான குற்றச்சாட்டில் சீர்காழி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாகவும், அதற்கு காவல்துறையினர் துணைபோவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன. பாண்டி ஐஸ் என்ற பெயரில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் கிராமங்களில் எளிதாக கிடைத்தன. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யும் நபர் நான். திடீரென்று நிறுத்த முடியாது. மொபைலுக்கு அதாவது மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு நிறைய பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாக பேசியிருந்தார்.

இதனைடுத்து சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா என்பவரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் அ.கயல்விழி இன்று (08.04.22) அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

தஞ்சை சரக காவல்துறை தலைவரின் அதிரடி நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்று தஞ்சை காவல் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை,

நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையில் யாரேனும் ஈடுபட்டாலோ அல்லது அதற்கு காவல்துறை உடந்தை என தகவல் வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.