தினமலர் பதிப்பாசிரியர் வெங்கடபதி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தினமலர் பதிப்பாசிரியர் வெங்கடபதி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பாசிரியராக இருந்த வெங்கடபதி காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் மூத்த மகனும், தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பாசிரியராக இருந்தவருமான வெங்கடபதி இன்று காலமானார். இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை கண்ணம்மாபேட்டையில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தினமலர் நாளேட்டின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பாசிரியராக இருந்தவருமான வெங்கடபதி இன்று அதிகாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தினமலர் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in