டீசல் விலை உயர்வு எதிரொலி: ரிக் உரிமையாளர்கள் 3 நாள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வு எதிரொலி: ரிக் உரிமையாளர்கள் 3 நாள் வேலைநிறுத்தம்
திருச்செங்கோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனக் கூட்டத்தில் அதன் தலைவர் லட்சுமணன் பேசினார்.

"டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி இன்று முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது" என தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் லட்சுமணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளன ஆலோசனை கூட்டம் திருச்செங்கோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற சம்மேளனத் தலைவர் லட்சுமணன் கூறுகையில், "நேர்முகமாகவும், மறைமுகமாகவோ லட்சக்கணக்கான குடும்பங்கள் பங்கு பெற்றுள்ள ரிக் (போர்வெல்) தொழில் டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வுக்கு ஏற்றவகையில் எங்களுடைய கட்டணத்தை உயர்த்திக் கொள்ளப்படும். மேலும், டீசலை மானிய விலையில் வழங்க வேண்டும். ரிக் தொழிலுக்கு உள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 5 சதவீதம் என அறிவிக்க வேண்டும்.

லாரிக்கு உள்ளது போல் ஒரே ஒரு நாடு முழுவதும் ஒரே வழி என்ற வகையில் ஒன் டேக்ஸ் ஒன் இந்தியா என்ற நிலையை உருவாக்க வேண்டும். இக்கோரிக்கை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் ரிக் வண்டிகளை ஓட்டாமல் ஒரே இடத்தில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.