அரசுப்பள்ளிச் சுவற்றில் இருந்த பெரியார் ஓவியம் சேதம்

அரசுப்பள்ளிச் சுவற்றில் இருந்த பெரியார் ஓவியம் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப்பள்ளிச் சுவற்றில் இருந்த பெரியார் ஓவியத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அவர்களை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடவுள் மறுப்பையும் தாண்டி பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அதனால் தான் அவர் ‘பகுத்தறிவு பகலவன்’ என நினைவு கூறப்படுகிறார். அதுமட்டும் இன்றி, வட நாட்டினர் காந்தியின் அழைப்பை ஏற்று மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈச்ச மரங்களை அழித்தபோது தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை அழித்தவர் பெரியார். பெண்களை போராட்டக் களத்திற்கு அழைத்து வந்ததிலும், அவர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்ததிலும் பெரியாரின் பங்களிப்பு அதிகம். திராவிடர் கழகத்தைத் தொடங்கி, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் தேவைக்கும் பாதை காட்டியது பெரியார் தான். அதனால்தான் இன்றும் பெரியார் நினைவு கூறப்படுகிறார்.

அடுத்த, அடுத்த தலைமுறையினரிடமும் பெரியாரைக் கொண்டுசேர்க்கும் வகையில் அரசுப்பள்ளிகளின் சுவர்களிலும் பெரியார் ஓவியமாக வரையப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒற்றையால்விளைப் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் சுவற்றில் வரையப்பட்டிருந்த பெரியாரின் ஓவியத்தின் மீது மர்மநபர்கள் சிலர் பைக் இஞ்சின் ஆயிலை ஊற்றியுள்ளனர். தந்தை பெரியாரை அவமதித்தவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும் என பெரியார் பற்றாளர்களும், திராவிடர் கழகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in