அறந்தாங்கி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கரோனா

இன்று 2 எம்எல்ஏக்கள் பாதிப்பு
அறந்தாங்கி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கரோனா
எம்எல்ஏ ராமச்சந்திரன்

அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் ஏறுமுகமாக உள்ளது. சென்னையில் ஆயிரம் தெருக்களுக்கு மேலாக கரோனா பாதிப்புள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகின்றது.

இந்நிலையில், நாளை(ஜன.5) கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இன்று பகலில் பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், எம்எல்ஏவின் உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், 2 எம்எல்ஏக்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.