சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழியேற்பு :சர்ச்சையில் சிக்கிய மதுரை அரசு மருத்துவக் கல்லூரி!

சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழியேற்பு :சர்ச்சையில் சிக்கிய மதுரை அரசு மருத்துவக் கல்லூரி!

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழியேற்பு நடைபெற்றது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,பெ. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் கலந்து கொண்டனர்.

அப்போது முதலமாண்டு மாணவர்கள் வழக்கமான ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சம்ஸ்கிருத உறுதிமொழியான ‘மகரிஷி சரக் ஷபத்’ உறுதிமொழியை வாசித்தார். இதனை மற்ற மாணவர்கள் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதனைப் படித்துக்கொண்டிருந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியரிடம் உறுதிமொழியேற்பு குறித்து சந்தேகத்தை எழுப்பினார். அத்துடன் மேடையில் பேசும் போது, "புதிய உறுதிமொழி ஏற்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவர்கள் ஹிப்போகிரட்டிக் சத்திய பிரமாணத்தை மட்டுமே செய்யும் நிலையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சம்ஸ்கிருத உறுதிமொழியான ‘மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி ஏன் ஏற்கப்பட்டது?" என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவக் கல்லூரி நிர்வாகம், உறுதிமொழி ஏற்பு குறித்து மாணவர் செயலாளர் ஒருவர் இது போன்று உறுதிமொழியை எடுத்து வாசித்துள்ளார். இதுகுறித்துவிளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று என்று கூறியுள்ளது. இந்த நிலையில், மருத்துவக் கல்லூரி இயக்குனரகம், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.