நடுரோட்டில் மோதிக்கொண்ட மாணவர்கள் : பதறிய கோவை மக்கள்

நடுரோட்டில் மோதிக்கொண்ட மாணவர்கள் : பதறிய கோவை மக்கள்

கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் நடுரோட்டில் இருகுழுக்களாக மோதிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு பேருந்து நிறுத்தத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் நடுரோட்டில் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் அங்கிருந்து பயந்து ஓடினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், மாணவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மாணவர்கள் இரு தரப்பாக மோதிக் கொண்டதை காரில் சென்ற ஒருவர் செல்போனில் பதிவு செய்தது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இதைப் பார்த்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிர்ச்சியடைந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். தற்போது அவரது அறிவுரையையும் மீறி கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.