`வன்முறையை தூண்டுகிறார்; மன்னார்குடி ஜீயரை கைது செய்யுங்கள்'

மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார்
மன்னார்குடி ஜீயர்
மன்னார்குடி ஜீயர்

``அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சாலையில் நடமாட முடியாது என்று பேசிய மன்னார்குடி ஜீயரை கைது செய்ய வேண்டும்'' என்று மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்தில் எதிர்வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கடந்த 4-ம் தேதியன்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய, மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் சுவாமிகள் "இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சாலையில் நடமாட முடியாது" என ஆவேசமாக தெரிவித்தார்.

புகார் மனு அளித்தவர்கள்
புகார் மனு அளித்தவர்கள்

அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் மற்றும் வழக்கறிஞர்கள் இளஞ்சேரன், வீரகுமார் ஆகியோர் இன்று மன்னார்குடி நகர காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். இளஞ்சேரன் பெயரில் அளிக்கப்பட்டுள்ள அம்மனுவில், ``ஆளுங்கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சாலையில் நடமாட முடியாது என்று பேசிய மன்னார்குடி ஜீயர், இந்திய இறையாண்மைக்கு எதிராக, வன்முறையை தூண்டும் விதத்திலும், மதப் பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசிவருகிறார். எனவே அவரை கைது செய்ய வேண்டும்'' என்று கோரியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in