பாடை கட்டி கியாஸ் சிலிண்டரை தூக்கிச் சென்ற கட்சியினர்: மதுரையில் நடந்த நூதனப் போராட்டம்

பாடை கட்டி கியாஸ் சிலிண்டரை தூக்கிச் சென்ற கட்சியினர்: மதுரையில் நடந்த நூதனப் போராட்டம்
கியாஸ் சிலிண்டருக்கு பாடை

மதுரையில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு, கரோனா ஊரடங்கிலிருந்து சற்றே மீண்டு வந்த சாமானிய மக்களுக்கும், ஏழைகளுக்கும் பொருளாதார ரீதியாக பலத்த அடியை கொடுத்துள்ளது . இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், இயக்கங்களும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மீனாம்பாள்புரத்தில் சமையல் எரிவாயுவிலை உயர்வைக் கண்டித்தும், செல்லூர்-குலமங்கலம் பிரதான சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிகளை துரிதப்படுத்தக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சமையல் எரிவாயுக்கு பாடை கட்டி தூக்கி சென்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பாடையைக் கட்டி தூக்கிச் செல்லும் கம்யூனிஸ்ட் கட்சியினர்
பாடையைக் கட்டி தூக்கிச் செல்லும் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in