திடீரென கலைந்த கர்ப்பம்... உயிரை மாய்த்த கல்லூரி மாணவி: திருமணம் நடந்த ஓராண்டில் சோகம்

திடீரென கலைந்த கர்ப்பம்... உயிரை மாய்த்த கல்லூரி மாணவி: திருமணம் நடந்த ஓராண்டில் சோகம்

கல்லூரியில் படித்துக் கொண்டிந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட மாணவிக்கு கர்ப்பம் கலைந்ததால் வேதனையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை நெற்குன்றம் தனலட்சுமிநகரை சேர்ந்தவர் லிங்கேஷ்வரி (21). இவருக்கு கடந்த ஆண்டு கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவரது கண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். லிங்கேஷ்வரி மெரினாவில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். படிக்கும் போதே இருவருக்கு திருமணம் நடந்ததால் திருமணத்திற்கு பின்பும் படிப்பை தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் லிங்கேஷ்வரி 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென லிங்கேஷ்வரியின் கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்ததில் இருந்த லிங்கேஷ்வரி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற கோயம்பேடு போலீஸார் லிங்கேஷ்வரி சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in