ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி

ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நெல்லிக்குப்பம் அருகே அருங்குணம் குச்சிபாளையம் அருகில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் இன்று காலை குளிக்க சென்ற 4 சிறுமிகள், 3 பெண்கள் என மொத்தம் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம்
கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம்

உயிரிழந்தோரின் உடல்களுக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in