பொதுமுடக்க தகவல்களுக்கு, சென்னை பெருநகர காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

பொதுமுடக்க தகவல்களுக்கு, சென்னை பெருநகர காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பொதுமுடக்கம் தொடர்பான தகவல்கள், ஐயங்களில் தெளிவு பெறுவதற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கினை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், வார நாட்களின் இரவு ஊரடங்கும்(இரவு 10 முதல் காலை 5 மணி வரை) ஞாயிறு தோறும் முழு முடக்கத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கு தொடர்பான தகவல்கள், சந்தேகங்கள், புகார்கள், விளக்கங்கள் ஆகியவற்றுக்காக சென்னை பெருநகர காவல்துறையை அணுகுவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காவல்துறையின் கரோனா கட்டுப்பாட்டு அறையின் உதவி மையத்தை 94981 81239, 94981 81236, 72007 01843, 72007 06492 ஆகிய 4 அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு பயன்பாட்டில் இருக்கும் 100, 112 மற்றும் காவலன் செயலி ஆகியவற்றை பயன்படுத்துமாறும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in