மருத்துவர் சுப்பையா மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

மருத்துவர் சுப்பையா மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி மருத்துவர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில், கடந்த 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு போராடிய ஏபிவிபி அமைப்பினர் 37 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மருத்துவர் சுப்பையா சந்தித்துப் பேசினார். அரசு ஊழியருக்கான விதிகளை மீறி சிறையில் உள்ளவர்களை பார்த்ததாக, மருத்துவர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த மருத்துவக் கல்வி இயக்ககம், துறை ரீதியிலான விசாரணை நடத்தியது.

இதனிடையே, மருத்துவர் சுப்பையா மீது, 2020-ம் ஆண்டில் தனது குடியிருப்புக்கு அருகில் இருந்த பெண் வீட்டின் முன்பு அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2017 முதல் 2020-ம் ஆண்டுவரை ஏபிவிபி தேசிய தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா, தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான குழுவில் உள்ளார்.

மருத்துவர் சுப்பையா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த பிரச்சினையில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனிடையே, தன் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவர் சுப்பையாவை தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.