ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு ரத்து: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு ரத்து: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களாக பணியாற்றும் அனைவரும் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை எடுக்காமல், அந்நாட்களில் பணிக்கு வந்திருப்பின் அதற்கான ஊதியத் தொகையை பணமாக பெறும் நடைமுறையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 11-ம் தேதி முதல் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ள பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், கல்வித்துறை ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, தனியே ஓர் உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in