கேரளம் செல்லும் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தம்

அன்றாடப் பணிகளுக்கு செல்வோர் தவிப்பு
கேரளம் செல்லும் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தம்
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிராகவும், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் குமரி மக்களின் இயல்புநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கேரளத்திற்கு செல்லும் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதால் மருத்துவம், கல்வி, அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கானோரின் இயல்புநிலையில் முடக்கம் ஏற்பட்டது.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் இருந்து வெறும் 90 கிலோ மீட்டரிலேயே கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் உள்ளது. குமரிமாவட்ட மக்களில் பலர் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகியவற்றிற்காக திருவனந்தபுரத்தைச் சார்ந்தே உள்ளனர். இதற்காகவே நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இருமாநில அரசுகளின் சார்பில் நூற்றுக்கும் அதிகமானப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கேரளத்தில் இடதுசாரிகள் மத்திய அரசுக்கு எதிராக மிகத் தீவிரமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றன. அதனால் குமரிமாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் பேருந்துகளும் முற்றாக நிறுத்தப்பட்டன. இதனால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையேயான சாலைப் போக்குவரத்து நூறு சதவிகிதம் முடங்கியது. குமரி மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளிலும் வெறும் 40 சதவிகிதப் பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு இன்று நடக்கிறது. அவர்களும் பேருந்து கிடைக்காமல் ஆட்டோக்களிலும், பெற்றோருடன் டூவீலர்களிலும் பள்ளிக்கு வந்தனர்.

Related Stories

No stories found.