சங்ககிரி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து

ஒருவர் பலி; 40 பேர் காயம்
சங்ககிரி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து
விபத்துக்குள்ளான தனியார் பேருந்து

சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி இன்று பகலில் 43 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர தென்னை மரத்தில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 40 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் அவர் சங்கரியைச் சேர்ந்த கணேசன் (65) என்று தெரியவந்தது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்து இளைஞர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை சேலம், ஈரோடு, திருச்செங்கோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிந்து, பேருந்து ஓட்டுநரான அயோத்தியாபட்டினத்தைச் சேர்ந்த வெற்றிவேலுவிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Related Stories

No stories found.