ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக பூத் ஏஜென்ட் வெளியேற்றம்!

மேலூர் நகராட்சியில் தேர்தல் அதிகாரி அதிரடி நடவடிக்கை
இஸ்லாம் பெண்ணிடம் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக பூத் ஏஜென்ட்
இஸ்லாம் பெண்ணிடம் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக பூத் ஏஜென்ட்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாம் பெண்ணிடம் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக பூத் ஏஜென்ட் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் மத அடையாளத்துடன் வரக்கூடாது என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, இஸ்லாம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக அரசின் இந்த செயல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழகத்திலும் இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி தேர்தலில் 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் ஹிஜாப்புடன் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த பாஜகவை சேர்ந்த பூத் ஏஜென்ட் கிரிராஜன், அந்தப் பெண்ணிடம் அகற்ற சொல்லியுள்ளார். இதற்கு அங்கிருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியின் பூத் ஏஜென்ட்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கிரிராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜென்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் வாக்குப்பதிவு மையத்திலிருந்து தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறையினர் அப்புறபடுத்தியதை அடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. அங்கு காவல் துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in