`தினமும் முட்டிபோட்டு பிரார்த்தனை செய்ய சொல்கிறார்'- மாணவி புகாரால் ஆசிரியர் சஸ்பெண்ட்

`தினமும் முட்டிபோட்டு பிரார்த்தனை செய்ய சொல்கிறார்'- மாணவி புகாரால் ஆசிரியர் சஸ்பெண்ட்

அரசுப் பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவிகளை இந்து மதத்தில் இருந்து, மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி
முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தையல் ஆசிரியையாக இருக்கும் பியட்றிஸ் தங்கம் என்பவர் பள்ளியில் பயிலும் இந்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, கிறிஸ்தவத்திற்கு மதம்மாற தொடர்ந்து அவர்களிடம் பேசிவந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மாணவி ஒருவர் இதுகுறித்து புகார் கொடுத்தார். குமரி ஆட்சியர் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரி புகழேந்தியிடம் அறிவுறுத்தினார். இதேபோல் இரணியல் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான விசாரணையின்போது பேசிய ஆறாம் வகுப்பு மாணவி, ‘எங்க டீச்சர் கர்த்தர் தான் ரொம்பப் பெரிய ஆளு. பைபிள் படிங்க எனச் சொன்னார். நாங்கள் இந்து பகவத் கீதை தான் படிப்போம் என்றோம். உடனே டீச்சர் பகவத் கீதை கெட்டது. பைபிள் தான் நல்லது என்று சொன்னார். இந்துவை சாத்தான் எனச் சொல்லி கதை சொல்லித் தருகிறார். பைபிள் படித்தால் இறந்தவர் கூட உயிர் பிழைப்பார்கள் என்று பாடம் எடுக்கிறார். தையல் டீச்சரான அவர் பிளஸ் சிம்பிள் போட்டுத்தான் தைத்துத் தருவார். தினமும் முட்டிபோட்டு பிரார்த்தனை செய்ய சொல்கிறார்’’ என பட, படவெனப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது. தக்கலை கல்விமாவட்ட அலுவலர் எம்பெருமான் தலைமையில் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிக்கை கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் தையல் ஆசிரியையை பியட்றிஸ் தங்கத்தை இன்று பணி இடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் புகழேந்தி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.