பெர்முடாஸ், டி ஷர்ட் சகிதம் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் - நடந்தது என்ன?

பெர்முடாஸ், டி ஷர்ட் சகிதம்  திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் - நடந்தது என்ன?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளூரில் இருந்தாலும், வெளியூரில் இருந்தாலும் தவறாமல் நடைப்பயணம் செய்துவிடுவார். அந்த வகையில் தூத்துக்குடியில் இன்று அரசு நிகழ்ச்சிக்கு வந்தவர் நடைபயிற்சியின் போது நடந்தேபோய் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டியில் இன்று நடைபெறும் நிகழ்வுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இதில் கோவில்பட்டியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 10.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலகத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதில் கலந்துகொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்திருந்தார். வழக்கமாக மா.சுப்பிரமணியன் தினசரி தவறாமல் நடைபயிற்சி செய்பவர். அந்தவகையில் இன்று காலை கோவில்பட்டி திட்டக்குளம் அருகில் நடைபயிற்சி செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தேபோய் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குட்டி பெர்முடாஸ், டீ சர்ட் சகிதம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அங்குள்ள மருத்துவ வருகைப் பதிவேட்டில், “எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தேன். அப்போது அங்கு சில பணியிடங்களில் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.”எனவும் எழுதி சென்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in