முதல்வர் மு.க.ஸ்டாலின் முகக்கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் முகக்கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
Updated on
2 min read

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையின் பல்வேறு இடங்களில் நேரில் சென்று பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கினார்.

முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் அணிவித்தல்
முதல்வர் முகக்கவசம் அணிவித்தல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்
முதல்வர் முகக்கவசம் வழங்கல்

சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பேருந்து நிறுத்தம், ரிச்சி தெரு அருகில், சேப்பாக்கம், அண்ணாசிலை, காஸ்மோபாலிடன் கிளப் அருகில், ஸ்பென்சர் பிளாசா எதிரில், ஆயிரம் விளக்குப் பகுதி, தேனாம்பேட்டை சித்தி விநாயகர் கோயில் தெரு, எல்டாம்ஸ் சாலை சிக்னல், எஸ்ஐஇடி கல்லூரிப் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நேரில் சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் முகக்கவசங்களை வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது பொதுமக்களுக்கு முதல்வர் ங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். பொதுமக்களும் அரசு எடுத்துவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in