பாஜக நிர்வாகி கொலை: பணியில் சேர்ந்த 5-வது நாளில் சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பாஜக நிர்வாகி கொலை: பணியில் சேர்ந்த 5-வது நாளில் சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பாஜக நிர்வாகி கொலையில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 2-ம் தேதி பாஜக பிரமுகர் பாலச்சந்தர் படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், சேலம் மாவட்டம், எடப்பாடியில் தலைமறைவாக இருந்த சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிரதீப், சஞ்சய், கலை மற்றும் ஜோதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அலட்சியமாக இருந்ததாக கூறி சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள முன்விரோதம் மற்றும் கொலையை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்த காரணத்தினால் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவசுப்பிரமணியன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளராக பணிக்கு சேர்ந்த 5 நாட்களிலேயே இந்த கொலை நடந்துள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in