புதுச்சேரியில் 27ம் தேதி முதல் விமான சேவை தொடக்கம்

புதுச்சேரியில் 27ம் தேதி முதல் விமான சேவை தொடக்கம்
புதுச்சேரி விமான நிலையம்

கரோனா கால கட்டுப்பாடுகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி விமானப் போக்குவரத்து வரும் 27ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. நாடெங்கும் கரோனா பரவல் தீவிரமானதைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் விமான போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. அண்மை காலமாக தொற்று பரவல் வேகமாக குறைந்து வரும் நிலையில தூத்துக்குடி, கோயம்புத்தூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனாலும் புதுச்சேரியிலிருந்து விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் தீவிர முயற்சியாலும், சுற்றுலாத்துறையின் தொடர் நடவடிக்கைகளாலும் புதுச்சேரியில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து வரும் 27 ம் தேதி முதல் விமான போக்குவரத்து தொடங்குகிறது. அன்றைய தினம் புதுச்சேரிக்கு வந்து சேரும் விமானத்தை முதல்வர் ரங்கசாமியும், சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணனும் வரவேற்கிறார்கள்.

ஐதராபாத்தில் இருந்து 12.05 மணிக்கு புறப்படும் ஸ்பைஸ் ஜெட் விமானம் 1.30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்து சேருகிறது. புதுச்சேரியில் இருந்து 1.50 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூருக்கு 2.50 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து 3.20 மணிக்கு புறப்படும் விமானம் திரும்பவும் புதுச்சேரிக்கு 4.10 மணிக்கு வந்து சேரும். புதுச்சேரியில் இருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத்துக்கு 6.15 மணிக்கு சென்றடைகிறது. இந்த விமான சேவைகள் தினமும் இயக்கப்படுகிறது. இந்த விமானங்களுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கி இருக்கிறது என்பதால் விமான போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.