சாலையில் பற்றி எரிந்த கார்: அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் உயிரிழப்பு

சாலையில் பற்றி எரிந்த கார்: அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் உயிரிழப்பு

சென்னையில் கார் தீப்பற்றி எரிந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சரின் உறவினர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மேற்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (42). தொழிலதிபரான இவர் கடந்த 5-ம் தேதி மேற்கு அண்ணா நகர் வடக்கு பிரதான சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவர் ஓட்டி வந்த சொகுசு கார் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து காரில் சிக்கிய கணேசனை மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த கணேசனை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத தீக்காயமடைந்த கணேசனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த விபத்து தொடர்பாக கணேசனின் மனைவி பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த கணேசன் அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in