12 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற மதுரை - தேனி ரயில்: முதல் நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா!

மதுரை - தேனி இடையிலான அகலப்பாதையில் இயக்கப்பட்ட பயணிகள் ரயிலுக்கு தேனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. படம் ஆர்.அசோக்
மதுரை - தேனி இடையிலான அகலப்பாதையில் இயக்கப்பட்ட பயணிகள் ரயிலுக்கு தேனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. படம் ஆர்.அசோக்

12 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற மதுரை - தேனி அகல ரயிலில் முதல் நாள் பயணத்தில் மொத்தம் 634 பயணிகள் பயணித்ததாகவும் அதன் மூலம் ரூ. 25 ஆயிரத்து 751 வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை - போடி இடையே 98 கிலோமீட்டர் துாரமுள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதையை, அகல பாதையாக மாற்றும் பணி கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. பல ஆண்டுகளாக பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. பணிகளை விரைவுபடுத்தக் கோரி தேனி மாவட்ட வியாபாரிகள் போராட்ட குழு அமைத்து போராடினர். தொடர்ந்து, 2016-ல் மீண்டும் ரூ.450 கோடி வழங்கி அகல ரயில் பாதை பணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், முதல்கட்டமாக தேனி வரை இயக்கப்படும் இந்த ரயில் தினமும் மதுரையில் இருந்து காலை 8:30 மணிக்கும், தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6:15 மணிக்கும் புறப்படும் என்றும் அதற்கு கட்டணமாக ரூ.45-ம் நிர்ணயித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. தொடர்ந்து, இச்சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இதன் முதல் பயணம் நேற்று தொடங்கியது. இதில், பயணித்த பயணிகள் பெரும் மகிழ்ச்சியுடன் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். மேலும், இதன் முதல் நாள் பயணத்தில் மொத்தமாக 634 பயணிகள் பயணித்ததாகவும், ரூ. 25 ஆயிரத்து 751 வருமாணம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது‌.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in