நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5,87,686 வாக்காளர்கள்

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5,87,686 வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியலை வெளியிடும் ஆட்சியர்...

நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளர் நிலவரம்:

உதகை தொகுதியில் 98,135 ஆண்கள், 1,07,283 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் என மொத்தம் 2,05,424 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கூடலூர் (தனி) தொகுதியில் 92,955 ஆண்கள், 97,914 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 என மொத்தம் 1,90,871 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். குன்னூர் தொகுதியில், 91,065 ஆண்கள், 1,00,323 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,91,391 வாக்காளர்கள் உள்ளனர்.

மூன்று தொகுதிகளிலும் சேர்த்து 2,82,155 ஆண்கள், 3,05,520 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் என மொத்தம் 5 லட்சத்து 87 ஆயிரத்து 686 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 5,879 வாக்காளர்கள் புதிதாக பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in