மதுரை வேலம்மாள் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து

மதுரை வேலம்மாள் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து

மதுரை ரிங் ரோட்டில் வேலம்மாள் கிராமம் என்ற இடத்தில் வேலம்மாள் கல்விக்குழும நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடையே ஏற்கெனவே சின்ன மோதல் நடந்துள்ளது. இன்று மதிய உணவு இடைவேளையின் போது மீண்டும் அவர்களிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது அவனியாபுரம் பகுதி மாணவர் மறைத்துவைத்திருந்த சிறிய கத்தியால் கடச்சனேந்தல் பகுதி மாணவரை வயிற்றில் குத்தினார்.

ரத்தம் கொட்டக் கொட்ட அவர் கதறியதைப் பார்த்து, மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் அந்த மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், கீரைத்துறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் உயர் வருவாய்ப்பிரிவினர் படிக்கிற பள்ளியிலேயே கத்திக்குத்து அளவுக்கு வன்முறை நடந்திருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in