பசுமை வீட்டில் வசிக்கும் ஏழைப் பெண்ணுக்கு 91 ஆயிரம் கரன்ட் பில்! நடந்தது என்ன?

பசுமை வீட்டில் வசிக்கும் ஏழைப் பெண்ணுக்கு 91 ஆயிரம் கரன்ட் பில்! நடந்தது என்ன?

தன் வறுமையான சூழலில் தமிழக அரசின் நிதி உதவிபெற்றுக் கட்டிய பசுமை வீட்டில் வாழும் ஏழைக் குடும்பத்திற்கு 91,139 ரூபாய் மின்கட்டணம் என குறுஞ்செய்தி வர அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் உள்ள பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாத்து. இவர் தன் தந்தை உதுமான் கனியுடன் வசித்துவருகிறார். இந்த வீடு இவர்களின் பொருளாதார வசதியில்லாத ஏழ்மைநிலையைக் கருத்தில்கொண்டு தமிழக அரசின் பசுமை வீடு நிதியில் கட்டியது ஆகும். இந்நிலையில் மின்வாரியத்தில் இருந்து இவரது செல்போனுக்கு கடந்த ஒருமாதங்களுக்கான மின் கட்டணத் தொகை குறித்த எஸ்.எம்.எஸ் வந்தது. இதைப் பார்த்து அவர் அதிர்ந்து போனார். காரணம், அவருக்கு வந்த மெசேஜில் மின்கட்டணம் 91,139 ரூபாய் என்று இருந்தது.

வீட்டில் ஒரு டிவி, இரண்டு பல்ப், ஒரு டியூப் லைட், இரண்டு மின்விசிறி இவ்வளவுதான் மொத்தமே இருக்கிறது. வழக்கமாக என் வீட்டிற்கு மின்கட்டணம் 100 ரூபாய்க்குள் உள் தான் வரும் என நாங்குநேரில் மின்வாரிய அலுவலகத்தில் போய் சொன்னார். அவர்கள் சோதித்துப் பார்த்தபோது தொழில்நுட்ப கோளாறினால் அப்படி தவறுதலாக குறுஞ்செய்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து இன்றுமாலையே இன்னொரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது வீட்டிற்கு 122 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என வந்துள்ளது. 122 ரூபாய்க்கு மின்சாரத்தை பயன்படுத்துபவருக்கு 91,000 ரூபாய் கூடுதலாக வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, இப்போது ஆறுதல்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in