தேர்வு மையங்கள் அருகில் 5 கிலோ 'பிட்’ பேப்பர்கள்: பறக்கும் படையினர் அதிர்ச்சி

தேர்வு மையங்கள் அருகில்  5 கிலோ 'பிட்’ பேப்பர்கள்: பறக்கும் படையினர் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வு தேர்வு மையங்கள் அருகே ஜெராக்ஸ் கடைகளில் பறக்கும் படையினர் மேற்கொண்ட ஆய்வில் 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் மைக்ரோ ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்ததை தேர்வு பறக்கும் படையினர் நேற்று கண்டுபிடித்தனர். உடனடியாக அனைத்தையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கடை உரிமையாளருக்கும் மாணவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர்.
குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் தேர்வு மையங்களுக்கு அருகே உள்ள ஜெராக்ஸ் கடைகளில் பிட் தயாரித்து தருவதாக பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்தனர். அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in