மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்ட 4 ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் எஸ்ஆர்இஎஸ் நிர்வாகிகள் சிலருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. இதற்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி மாறுதல் வழங்க வேண்டும் என்று சதர்ன் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பணி மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு சங்கங்களின் நிர்வாகிகளும் மே 19-ம் தேதி அடிதடியில் ஈடுபட்டனர். இதில் சிலக்குக் காயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து 4 ரயில்வே ஊழியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.