ஆண்களைவிட பெண்கள் அதிகம்; நீலகிரி மாவட்டத்தில் 294 கவுன்சிலர்கள் பதவியேற்பு

பதவியேற்றுக் கொண்ட கவுன்சிலர்கள்
பதவியேற்றுக் கொண்ட கவுன்சிலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 294 பதவியிடங்களில் 151 பெண்களும், 143 ஆண்களும் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெண் கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் ஆகிய நான்கு நகராட்சிகளில் 108 வார்டுகள், அதிகரட்டி, பிக்கட்டி, தேவர்சோலை, உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கீழ்குந்தா, கோத்தகிரி, நடுவட்டம், ஓவேலி, சோலூர் ஆகிய 11 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

உதகை நகராட்சி நகரமன்ற கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் காந்திராஜ் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 36 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதே போல குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகளில் மற்றும் 11 பேரூராட்சிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் கவுன்சிலர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் மொத்தமுள்ள 294 பதவிகளில் 151 பதவிகளில் பெண்களும், 143 பதவிகளில் ஆண்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனால், மாவட்டத்தில் ஆண்களை பெண்கள் கூடுதலாக கவுன்சிலர்களாக உள்ளனர். நகராட்சிகளில் 55 பெண்களும், பேரூராட்சிகளில் 96 பெண்களும் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில், நகராட்சிகளில் 2 பழங்குடியின பெண்கள், 18 ஆதிதிராவிட பெண்களும், 35 பொதுப்பிரிவு பெண்களும் கவுன்சிலர்களாக உள்ளனர். 11 பேரூராட்சிகளில் 3 பழங்குடியின பெண்களும், 41 ஆதிதிராவிட பெண்களும், 52 பொதுப்பிரிவு பெண்களும் கவுன்சிலர்களாக உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in