ஒரே நாளில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் பாதிப்பு: சென்னையில் அதிகரிக்கிறதா கரோனா?

ஒரே நாளில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் பாதிப்பு: சென்னையில் அதிகரிக்கிறதா கரோனா?

சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 25 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி முழுவதும் உள்ள மாணவர்களுக்குப் பரிசோதனை செய்யக் கல்லூரி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே அம்மா பேட்டையில் சத்யசாய் மருத்துவக் கல்லூரி உள்ளது. தற்போது முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் வெளியூர் மற்றும் வடமாநில மாணவர்கள் விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழைக் கல்லூரி நிர்வாகம் சமர்ப்பிக்க அறிவுறுத்தி இருந்தது.

முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய நிலையில் அவர்களுக்குக் கல்லூரி நிர்வாகம் சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சுமார் 60 மாணவர்களுக்கு நடத்திய சோதனையில் 40 பேருக்கு முடிவுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில் 20 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு தற்போது கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கரோனா தொற்று உள்ள மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கரோனா தொற்று உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால் கல்லூரி மாணவர்கள் பதற்றத்தில் உள்ளனர். டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலும் கரோனா பரவல் அதிகரிகக்கலாம் என மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in