`22 விதிகளை கடைப்பிடிக்கணும்'- தனியார் பள்ளிகளுக்கு சென்ற சுற்றறிக்கை

`22 விதிகளை கடைப்பிடிக்கணும்'- தனியார் பள்ளிகளுக்கு சென்ற சுற்றறிக்கை

பள்ளி வாகனங்களை ஓட்டும்போது, சினிமா பாடல்களை போடக்கூடாது என்பது உள்பட 22 வகையான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.

சென்னையில் நேற்று 2-ம் வகுப்பு மாணவன் திக் ஷித் பள்ளி வளாகத்திலேயே வேன் மோதி உயிரிழந்ததைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 22 வகையான விதிகளை கடைப்பிடிக்குமாறு சென்னையில் உள்ள 500 தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், 'பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். புதுப்பிக்கப்படாத பேருந்துகளை இயக்கக் கூடாது. உரிய கல்வி தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்று உரிமம் வைத்துள்ளவர்களையே ஓட்டுநராக நியமிக்க வேண்டும். பேருந்தின் 4 புறமும் மாணவர்கள் இருக்கிறார்களா என்பதையும் சரிபார்க்க வேண்டும். பள்ளி பேருந்து, வேன், ஆட்டோவில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் அதிகளவு மாணவர்களை ஏற்றக் கூடாது. மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனத்திற்கு உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

மாணவர்களை ஏற்றி, இறக்குவதற்கு உதவியாளர் கட்டாயம் பள்ளி வாகனங்களில் இருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை ஓட்டும்போது, சினிமா பாடல்களை போடக்கூடாது. 30 நிமிடத்திற்கு மேல் மாணவர் பயணிக்காத வகையில் வாகனங்களின் பயண தடத்தை அட்டவணையிடுங்கள். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றுவதை பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in