வைகையில் இருந்து 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு !

சித்திரைத் திருவிழாவிற்காக அதிகாரிகள் ஏற்பாடு
வைகையில் இருந்து 216 மில்லியன் கனஅடி  தண்ணீர் திறக்க முடிவு !

வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்காக 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 3 முறை முழுக்கொள்ளவை எட்டியது. கடந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட நிலையில், தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறையாமல் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழாவிற்கு வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதனால் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கரோனா பரவல் குறைந்து விட்டதால் கொடியேற்றத்துடன் இன்று சித்திரைத் திருவிழா துவங்கியுள்ளது.

இதற்காக வைகை அணையில் இருந்து மார்ச் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 216 மில்லியன் கனஅடி தண்ணீர் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு வைகை பொதுப்பணித்துறையினர் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். முதல் நாளில் 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, பிறகு படிப்படியாக அளவு குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in