சென்னையில் 19 நாட்கள் புத்தகக் காட்சி! -தமிழக அரசு அனுமதி

பிப்.16 முதல் மார்ச் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது
சென்னையில் 19 நாட்கள் புத்தகக் காட்சி!  -தமிழக அரசு அனுமதி
சென்னை புத்தகக் காட்சிHindu கோப்பு படம்

சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், வரும் 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதிவரை புத்தகக் காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம்(பபாசி) சார்பில், ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடைபெறும். ஆனால், கரோனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடு காரணமாக புத்தகக் காட்சி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தகக் காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் பிப்ரவரி 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதிவரை புத்தகக் காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அரசின் அனுமதியைத் தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in