குடியரசு தினத்தையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

தலைமை செயலகத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு
குடியரசுத் தினம்
குடியரசுத் தினம்hindu கோப்பு படம்

நாடு முழுவதும் நாளை 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்ட இடங்களில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக காமராஜர் சாலையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மட்டும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், அப்பகுதி சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

இதற்கிடையே 26ம் தேதி குடியரசு தினவிழாவை ஓட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த தேநீர் விருந்து அளிக்கும் விழா கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்று குறைந்த பின்பு தேநீர் விருந்து விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in