முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குத் தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குத் தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

கடந்த அதிமுக அரசில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த தங்கமணி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் மீதும், அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 15-ம் தேதி தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் ரூ.2.16 கோடி ரொக்கம், 1.130 கிராம் தங்கம், பல வங்கிகளின் பெட்டகச் சாவிகள், ஹார்டு டிஸ்க்குகள், செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து, இன்று (டிச.20) தங்கமணிக்குத் தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நாமக்கல்லில் 10 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், சேலத்தில் 1 இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in