சர்மிளா அதிரடி அறிவிப்பு… தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி!

சர்மிளா
சர்மிளா

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் 119 இடங்களிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா அறிவித்துள்ளார். 

தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தெலங்கானா மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஆளும் பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் – ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியை சேர்ந்த ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.

ஒய்.எஸ்.சர்மிளா
ஒய்.எஸ்.சர்மிளா

நேற்று ஹைதராபாத்தில் கட்சி மாநில நிர்வாகிகளுடன் சர்மிளா ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர்,  தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பாலேரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். மேலும் வேறு ஒரு இடத்திலும் போட்டியிட உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நான்கு மாதம் காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்ததாகவும், ஆனால் அவர்கள் முடிவு தெரிவிக்காததால் 119 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in