தசரா ஸ்பெஷலாக குவாட்டரும், கோழியும்... அரசியல் பிரமுகரின் அசத்தல் பரிசு!

பரிசு வழங்கும் டொட்டி பாபு ஆனந்த்
பரிசு வழங்கும் டொட்டி பாபு ஆனந்த்

நாடு முழுவதும் நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் 24ம் தேதி செவ்வாய்கிழமை ஆந்திராவில் தசரா பண்டிகையையொட்டி குவாட்டரும், கோழியும் வழங்கப்பட்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் டொட்டி பாபு ஆனந்த், தசரா பண்டிகையை தனது வார்டு மக்களுடன் கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது டொட்டி பாபு ஆனந்த், சாலையில் செல்லும் அனைவருக்கும் உயிர் கோழி மற்றும் குவாட்டர் கொடுத்து தசரா பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார்.. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in