ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பியின் மகன் கைது: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அதிரடி

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பியின் மகன் கைது
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பியின் மகன் கைதுடெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அதிரடி

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஓங்கோல் எம்.பி மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டாவை கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் ராகவ் மகுண்டா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று உள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அங்கு அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் ஒன்பதாவது கைது இதுவாகும், மேலும் இந்த வாரத்தில் நடக்கும் மூன்றாவது கைது இது. பஞ்சாபின் முன்னாள் எஸ்ஏடி எம்எல்ஏ தீப் மல்ஹோத்ராவின் மகன் கவுதம் மல்ஹோத்ரா மற்றும் சாரியட் புரொடக்ஷன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற விளம்பர நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜோஷி ஆகியோரை இந்த வார தொடக்கத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது.

இப்போது கைவிடப்பட்ட டெல்லி கலால் கொள்கையின் ஒரு பகுதியாக மதுபான சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் 'சவுத் குரூப்' என்ற கார்டெல் உருவாக்கப்பட்டதாகவும், அதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஓங்கோல் தொகுதி எம்.பி மகுண்டா சீனிவாசலு ரெட்டி மற்றும் அவரின் மகன் ராகவ் மகுண்டா ஆகியோர் ஒரு பகுதியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அரசின் பிற கலால் துறை அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in